கோவையில் கல்லூரி மாணவர்கள் – வட இந்திய தொழிலாளர்கள் இடையே மோதல்… சரமாரியாக தாக்கிக் கொண்ட அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 12:08 pm

கோவை ; கோவையில் சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனத்தின் கேண்டினில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.

கோவையை அடுத்த சூலூரில் அமைந்துள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனம். இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேவேளையில், இந்தக் கல்லூரியில் கேண்டின் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கேண்டினில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இப்படி இருக்க கேண்டினில் மாணவர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மாணவ, மாணவிகள் அலைமோதும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஒன்றில் வடமாநில இளைஞர்கள் உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் கல்லூரியில் சுற்றி வருவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!