‘ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’… காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டி அண்ணாமலைக்கு திமுகவினர் பதிலடி..!!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 12:22 pm

கோவை ; ‘இது என்னோட மண்.. ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ என்று காலா பட பாணியில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும் “இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று போஸ்டரில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த போஸ்டரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை, கோட்டைமேடு, உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பயணத்தை இன்று துவங்க உள்ள நிலையில், திமுகவினர் அதற்கு பதிலடியாக இந்தப் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!