செந்தில் பாலாஜிடம் இருந்த கடைசி பொறுப்பு.. அமைச்சர் முத்துச்சாமிக்கு தூக்கி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ; வெளியானது முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
6 July 2023, 6:46 pm

கோவை ; கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்தல், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் அவசர கால பணிகளை மேற்கொள்ள வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக ஏற்கனவே ராமச்சந்திரன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!