எடப்பாடி பழனிசாமி கட்டிக்கொடுத்த பாலம்… இன்னும் திறக்காதது ஏன்..? தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக!!

Author: Babu Lakshmanan
30 மே 2022, 3:11 மணி
Quick Share

கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகும், திறக்கப்படாமல் கிடக்கும் கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக போஸ்டர் ஒட்டியுள்ளது.

கோவையில் முக்கியப் பல பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த அதிமுக ஆட்சியில் பல பகுதியில் புதிய பாலங்களுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

kavundampalayam: Kavundampalayam Flyover To Be Ready In Two Weeks |  Coimbatore News - Times of India

அதில், குறிப்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பாலங்கள் கட்டப்பட்டு வந்தது. இதனிடையில் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் பாலங்கள் வேலை நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கட்டுமான நிறுவனங்கள் அரசு தங்களின் கட்டுமான நிலுவை தொகையை நிறுத்தியதே பாலங்களின் வேலைகள் தாமதம் ஆனதாகவும், சில இடங்களில் வேலை பணிகள் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Cbe Cm Stalin - Updatenews

இதற்கிடையில், வேலை முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் கவுண்டம்பாளையம் புதிய பாலம் திறக்கப் படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. அண்மையில் கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பாலத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாலத்தை திறக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தற்போது பாலத்தின் மீது, கட்டிக் கொடுத்த பாலத்தை விரைவில் திறக்க சொல்லி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Roja முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
  • Views: - 977

    0

    0