கோவை மேயர் பதவிக்கு திமுகவில் போட்டா போட்டி… மோதும் 3 பெண்கள்…? இதுல வாரிசு அரசியல் வேற…!!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 7:11 pm

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. 100 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சியில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாநகராட்சியில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை கிழக்கு மண்டலத்தில் 63 பேரும், மேற்கு மண்டலத்தில் 78 பேரும், தெற்கு மண்டலத்தில் 43 பேரும், வடக்கு மண்டலத்தில் 95 பேரும், மத்திய மண்டலத்தில் 93 பேரும் என 372 பேர் போட்டியில் உள்ளனர்.

அனைத்து கட்சியினரும் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியை குறி வைத்து தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மற்ற கட்சியினருடன் இருக்கும் போட்டியை விட, திமுகவில் இருக்கும் போட்டியே கடும் சவாலாக உள்ளது.

ஏற்கனவே கட்சிக்காக உழைத்த பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சித் தலைவர்களின் மனைவி மற்றும் மகளுக்கு சீட்டு வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு சிலருக்கு இடம் கொடுத்ததாகவும் கூறி, திமுக தலைமையை எதிர்த்து அக்கட்சியினரே பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களப்பணி ஆற்றப் போவதில்லை என்று பின்வாங்கிவிட்டனர். இதனால், பெரும்பாலான திமுக வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.

DMK Mariyal - Updatenews360

இதுஒருபுறம் இருக்க, திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே, மேயர் கனவில் இருந்த, மீனா ஜெயக்குமார் கோவையில் உள்ள 57வது வார்டில், தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால், அவருக்கு கட்சியின் மேலிடம் கல்தா கொடுத்து விட்டு, சாந்தாமணி என்பவருக்கு சீட் கொடுத்தது.

Meena Jayakumar - Updatenews360

வேட்பாளர்கள் தேர்வில் திமுக மோசம் செய்துவிட்டதாக அக்கட்சியினரே கூறி வரும் நிலையில், திமுக மேயர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டு வருகின்றனர். அவர்களில் முதலாவதாக, 46-வது வார்டில் போட்டியிடக் கூடிய மீனா லோகு, ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் கொண்டவர். இவர்தான், மேயர் ரேஸில் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, திமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி ஆவார். இவர் திமுக மேயர் போட்டியில் 2வது இடத்தில் உள்ளார். ஏற்கனவே, இவரது கணவர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவராவார். மக்கள் நீதி மய்யத்தினால் எம்எல்ஏ வாய்ப்பு மட்டுமல்லாது, அமைச்சர் வாய்ப்பை இழந்த நா.கார்த்திக், எப்படியாவது தனது மனைவியை மேயராக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக, திமுகவினரே எதிர்பார்க்காத நபர்தான். அவர் வேறு யாருமில்லை, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா. வெறும் 22 வயதே ஆன இவர், 97-வது வார்டில் போட்டியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கலின் போது தனது படிவத்தில் பல தவறுகள் செய்திருந்த நிலையில், ஆளும் திமுக என்பதால், போட்டியிடும் வாய்ப்பை நிவேதா பெற்றுள்ளார். இளம் வேட்பாளரான இவர் திமுக தலைமையின் பார்வையில் இருப்பதால், இவர் மேயராக வாய்ப்பிருப்பதாகவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இத்தனை கடும் போட்டி நிலவி வந்தாலும், கோவையில் முதலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும், மேயர் வேட்பாளர் எல்லாம் கட்சியின் தலைமைதான் தீர்மானிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1323

    0

    0