விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து… 3 பேர் பரிதாப பலி ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 7:44 pm

கோவை ; கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 3 விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் 3 இளைஞர்கள் பரிதா

சாலையோரங்களில் விளம்பர பலகை மற்றும் விளம்பர பேனர்களை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், ஆளும் கட்சியினர் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் விதமாக, நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, பேனர்களை ஆங்காங்கே வைப்பது வாடிக்கையாகிவிட்டது.

இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், உரிய கட்டணம் செலுத்தி, பாதுகாப்பான முறையில் விளம்பரப் பலகையை வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அவிநாசி மெயின் சாலையில் விளம்பர பலகையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பெரிய பேனர் பேனல் காற்றில் ஆடியது, இதையடுத்து அனைவரும் அவசரகதியில் இறங்கிய போது, பேனர் பேனல் சரிந்தது.

விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் பெயர் குணசேகரன் வயது (52), குமார் (50), குமார் (35) என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கருத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 553

    0

    0