கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு… சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமா..? ராமதாஸ் கடும் கண்டனம்..!!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 1:00 pm

கோவை ; கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்!

கோவை மாவட்டம் வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது.

பொது அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 414

    0

    0