சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… யூடியூபர் பெலிக்ஸ் மீதும் கோவை போலீசார் நடவடிக்கை..!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 10:15 am
Quick Share

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!

இதனிடையே, கஞ்சா கடத்தல், அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கரை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

சவுக்கு சங்கரை தொடர்ந்து, அவரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி, இரு பிரிவினர் இடையே சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 132

0

0