கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… பிரதமரின் வருகையின் போது விடுத்த மிரட்டலால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 2:32 pm

கோவைக்கு பிரதமர் மோடி வர உள்ள நிலையில், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அண்மையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று மாலை கோவை மாநகருக்கு வர உள்ள நிலையில், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!