கோவை அருகே நறிக்குறவர்கள் குடும்பத்தினரை தியேட்டர்கள் படம் பார்க்க அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈச்சனாரி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 40 பேர் சுந்தராபுரம் போத்தனூர் சாலையில் உள்ள அரசன் திரையரங்கிற்கு ஜிகர்தண்டா படம் பார்க்க சென்றுள்ளனர். கையில் குழந்தைகளுடன் திரைப்படம் பார்ப்பதற்காக காலை 11 மணிக்கு சென்ற அவர்களுக்கு ஆன்லைனிலும் கவுண்டரிலும் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக கூறிய திரையரங்கு நிர்வாகத்தினர், இரவு காட்சிக்கு வருமாறு கூறியுள்ளனர்.
மேலும் மதியம் 2 மணி காட்சிக்காவது டிக்கெட் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறவே, அங்கிருந்து அவர்களை வெளியேற்றிய திரையரங்கு நிர்வாகத்தினர் இரவு வருமாறும் இரவு காட்சிக்கு மட்டுமே டிக்கெட் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும் பிற்பகல் 3 மணி வரை திரையரங்கு வளாகத்திலேயே டிக்கெட்டிற்காக காத்திருந்த மக்கள், அந்த காட்சிக்கும் டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் திரையரங்கிற்கு வெளியே சாலையில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாலையில் அவர்களை அழைத்த திரையரங்க நிர்வாகத்தினர் ஏழு மணி காட்சிக்கு 40 டிக்கெட் வழங்கி அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும், இரவு காட்சிக்கும் தங்களுக்கு டிக்கெட் வேண்டும் என்று கூறி, மேலும் 40 டிக்கெட்டை வாங்கிய நறிக்குறவர் இன மக்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்கில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
ஏற்கனவே, சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்காத சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், தற்போது கோவை அரசன் திரையரங்கிலும் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.