‘நட்பை வளர்க்கலாம் வீட்டுக்கு வா’… மாணவியை சில்மிஷத்திற்கு அழைத்த அரசு கல்லூரி ஆசிரியர் கைது… வைரல் ஆடியோ!!!
Author: Babu Lakshmanan7 April 2022, 4:29 pm
திருவள்ளூர் : பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவி ஒருவரை பேராசிரியர் வீட்டிற்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம், அதே துறையில் கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் தனது செல்போனில் மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும்.. வா பழகலாம் என்றும் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் சேகரிடம் அளித்த புகாரின் பேரில், இது பற்றி, விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் மகளிர் குறை தீர்க்கும் மன்றம் மூன்று உதவிப் பேராசிரியர்கள் மூலம் சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் உதவிப் பேராசிரியரிடம் விசாரணை செய்யப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக கல்லூரிகளின் இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியிடம் தவறாக செல்போனில் பேசியது குறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், கல்லூரி உதவி பேராசிரியர் மகேந்திரனிடம் கல்லூரி முதல்வர் முன்னிலையில் மாணவியிடம் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
தற்போது புகாரில் சிக்கியுள்ள உதவி பேராசிரியர் மீது ஏற்கனவே இது போன்ற சில புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், கல்லூரி மாணவியிடம் பேசிய ஆடியோ விவரம் உண்மை நிலவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்றாம் ஆண்டு பயிலும் அனைத்து கல்லூரி மாணவிகளிடம் கல்லூரி உதவி பேராசிரியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர் .
உதவிப் பேராசிரியர் கைது செய்து விசாரணைக்காக போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்து நுழைவுவாயில் முன்பாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி உதவிப் பேராசிரியரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது ஓய்வுபெற உள்ள நிலையில் மாணவியின் புகாரில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0