எங்க வீட்டுக்கு வாங்க.. என் மனைவி மாட்டுக்கறி நல்லா சமைப்பாங்க : ஹெச் ராஜா அழைப்புக்கு சீமான் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 8:04 pm

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சீமான் இன்று பேசுகிற கருத்துகளை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் பேசி இருக்கிறேன். அவருடன் நெருக்கமான உறவும் இருந்தது.

சீமான் தமது தமிழ் தேசியம் என்கிற பிரிவினைவாதத்தைக் கைவிட்டால் நெருங்கி செல்லலாம். நாம் தனித்தனியே இருந்தால் எதுவும் செய்ய முடியாது. சீமான் சிந்தித்து தமிழ் தேசிய நிலைப்பாட்டை மாற்றினால் அவருடன் அடுத்ததாக பேச தயார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், எச்.ராஜா தமிழ் தேசிய கருத்தை கைவிட்டால் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்த கருத்துபற்றி என்ன நினைக்கிறீர்கள் என சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், எச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான், வாய்ப்பில்லை ராஜா. பாசமாக நானும் கூப்பிடுகிறேன்.. எச்.ராஜா அண்ணன் என் வீட்டுக்கு வாங்க. என் மனைவி நன்றாக மாட்டுக்கறி சமைப்பார். ரெண்டு பேசும் சாப்பிட்டுட்டு பேசிக்கொண்டிருப்போம். நட்பு வேறு, அரசியல் கோட்பாடு வேறு என்றார்.

அதற்கு செய்தியாளர்கள், இவ்வளவு நாளாக, தேசதுரோகி என விமர்சித்த எச்.ராஜா உங்களை பாசத்துடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், “நான் வளர்கிறேன் மம்மி” என புகழ்பெற்ற விளம்பர வசனத்தை கூறி தனது ட்ரேட்மார்க் சிரிப்பை வெளிப்படுத்தினார்.

திருமாவளவன் தமிழ் தேசியம் தோல்வியடைந்த ஒன்று, அது என்றைக்குமே வெற்றி பெறாது எனத் தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “அண்ணன் திருமாவளவன் பொறுத்திருந்து பாருங்கள்.. அவர் தோற்றுவிட்டார் என்பதற்காக யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்லும் உரிமை அவருக்குக் கிடையாது.

இந்த அரசியலை முதன்முதலாக எனக்கு கற்பித்தது அவர்தான். பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஓடிச் சென்று பதக்கம் வாங்குவதில்லை. பயிற்சி பெற்ற மாணவன் தான் பதக்கம் வெல்கிறான். தோற்றுப்போய் இருந்தால் ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்? தமிழ் தேசிய சித்தாந்தம் இப்போது தான் வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 502

    0

    0