கமர்ஷியல் சிலிண்டர் விலை ரூ.91 குறைப்பு: 4 மாதங்களாக ஒரே விலையில் நீடிக்கும் வீட்டு சமையல் சிலிண்டர்..!!

Author: Rajesh
2 February 2022, 9:45 am

சென்னை: சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று முதல் குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

அதேவேளை, தமிழகத்தில் இம்மாதத்துடன் சேர்ந்து தொடர்ந்து நான்கு மாதங்களாக வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றப்படாமல் 915.50 ரூபாயாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2108

    0

    0