ஐ.டி., அமலாக்கத்துறையால் ரெய்டுக்கு ஆளான நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை : வெளியான ஷாக் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 8:57 pm

ஐ.டி., அமலாக்கத்துறையால் ரெய்டுக்கு ஆளான நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை : வெளியான ஷாக் தகவல்!

2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், ED,IT ரெய்டு நடைபெற்ற 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு 187.58 கோடியை வழங்கிய 23 நிறுவனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் ED,IT ரெய்டு நடத்தப்பட்ட ஆண்டு வரை பாஜகவுக்கு எந்த நன்கொடையும் வழங்கப்படவில்லை என்று நியூஸ் லாண்ட்ரி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவற்றில் குறைந்தது 4 நிறுவனங்களாவது ED,IT ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதங்களுக்குள் பாஜகவுக்கு 9.05 கோடி நன்கொடை அளித்துள்ளன.

ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஜகவுக்கு நன்கொடை அளித்த 6 நிறுவனங்கள், எதாவது ஒரு ஆண்டில் நன்கொடை அளிக்க தவறிவிட்டால், அந்த ஆண்டே அந்நிறுவனங்களில் மீது ED,IT ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஊழல்கள் பலவகை. அதில் இது ஒரு புது வகை!” என நியூஸ் லாண்ட்ரி கட்டுரையை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 299

    0

    0