டிரெண்டிங்

தொப்புள் கொடியால் சிக்கிய இர்ஃபான்.. மருத்துவ கவுன்சிலில் புகார்!

சமூக வலைத்தள பிரபலம் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள்கொடி அறுத்தது தொடர்பான வீடியோவை பதிவிட்டது குறித்து தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் இயக்குனர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: சிறு கடைகள் முதல் பல்வேறு உயர்தர உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் உணவுகளை சுவைத்து, அதன் தன்மை மற்றும் அதன் சூழலியலை மிகவும் எளிதாக மக்களுக்கு நெருக்கமாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். இவருக்கு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.

மேலும், இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை தனது youtube பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்கு குழந்தை பிறந்த தருணத்தை மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் வீடியோவாக மாற்றி, அதனை பதிவிட்டு இருந்தார்.

குறிப்பாக, அதில் தொப்புள் கொடியை அறுப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைய முடியும். அதேபோல், உரிய பயிற்சிகள் பெற்றவர்கள் மட்டுமே தொப்புள் கொடியை அறுக்க வேண்டும் மாறாக, இது தனி நபர் உரிமையை மீறும் செயலாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர், இர்ஃபான் மீது மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார். முன்னதாக, தற்போது இருப்பானுக்கு பிறந்துள்ள குழந்தை க்காக அவர் மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், வெளிநாட்டில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, அதனை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

எனவே, அப்போது அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இர்பான் அதற்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மருத்துவத் துறையில் சர்ச்சையில் சிக்கியுள்ள இர்ஃபான் என்ன செய்யப் போகிறார் என்பது இனி தெரியவரும். மேலும், இவர்களுக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

4 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

5 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

7 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

8 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

9 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

9 hours ago

This website uses cookies.