சமோசாவில் இருந்த நிரோத், குட்கா, கற்கள் : ஊழியர்கள் ஷாக்… அதிர்ச்சி பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 4:06 pm

சமோசாவில் இருந்த நிரோத், குட்கா, கற்கள் : ஊழியர்கள் ஷாக்… அதிர்ச்சி பின்னணி!!

சமோசா சாப்பிடும் போது உள்ளே இருந்த ஆணுறை, குட்கா, கற்களால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

புனேவில் பிம்பாரி சின்ச்வாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களுக்கு சமோசா வழங்கப்பட்டது.

அதில் ஆணுறை, குட்கா, கற்கள் இருந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ஃபிரோஸ்ஷேக் மற்றும் விக்கி ஷேக் தான் இதற்கு காரணம் என காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு சமோசா வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு SRI என்ற சமையல் ஆர்டர் எடுக்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இதனால் மனோகர் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் SRI நிறுவனத்தினர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதே ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு முன்னதாக சிற்றுண்டி வழங்கி கொண்டிருந்தது SRI எண்டர்பிரைஸ். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான் ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக்.

இவர்கள் வழங்கிய சிற்றுண்டியில் ஒருமுறை பேண்டேஜ் கிடந்ததால் ஒப்பந்தத்தை ரத்தான நிலையில் பின்னர் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கைமாறியுள்ளது.

ஒப்பந்தம் கைமாறியதால் ஆத்திரமடைந்த ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக் ஆகியோர் தங்களின் முன்னாள் ஊழியர்களான ஃபிரோஸ்ஷேக் மற்றும் விக்கி ஷேக்கை அழைத்து சமோசாவில் ஆணுறை, குட்கா, கற்கள் கலக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த குற்றத்தில் ஃபிரோஸ்ஷேக், விக்கி ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக் ஆகியோரை கைது செய்து ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!