பாஜக போட்ட நிபந்தனை.. கூட்டணியில் இருந்து வெளியேற ஓபிஎஸ், டிடிவி முடிவா?? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
திமுக தனது கூட்டணிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த நிலையில், அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணி, டிடிவி அணி ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி அணியினரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக முயன்று வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி போடும் கட்சிகள், தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளதால் தற்போது அது விஸ்வரூபமாக எழுந்துள்ளது.
முதலமைச்சராக இருந்துள்ள ஓபிஎஸ்க்கு இது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. டிடிவியும் தேர்தல் ஆணையத்திடம் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கியுள்ள நிலையில் பாஜகவின் இந்த நிபந்தனையால் அதிர்ச்சியில் உள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
This website uses cookies.