விசிக – பாமகவினர் இடையே மோதல்…. விசிக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு : சாலை மறியலால் பதற்றம்.. போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 10:44 pm

கடலூர் : விசிக ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடியை பாமகவினர் உடைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

கடலூர் மாவட்டம் பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் பாமக -விடுதலை சிறுத்தை கட்சி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் புவானிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் ஜோதி கார் கண்ணாடி உடைக்கப் பட்டது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.500 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி