திமுக கூட்டணிக்குள் குழப்பம்.. விரைவில் உடையும் : பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஆரூடம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 6:22 pm

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா ஏன் சர்ச்சை ஆக வேண்டும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாஜகவை பொறுத்தவரை நாங்கள் மற்ற அரசியல் கட்சியில் விட மாற்று சிந்தனையை கொண்டு கட்சியை வளர்த்து வருகிறோம்

சமுதாயத்தில் தீண்டாமை இருப்பது எவ்வளவு தவறு அதே போன்று அரசியலிலும் தீண்டாமை இருப்பது மற்றும் கட்சிகளை பார்க்கக்கூடாது பேசக்கூடாது என்று அவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு கிடையாது.

தேர்தலுக்காக அமைக்கின்ற கூட்டணி வேறு பாஜகவின் பல நிகழ்ச்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார். நாணயம் வெளியீட்டு விழாவை ஏன் சர்ச்சையாக விவாதிக்க வேண்டும்

பாஜக வோடு திமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்று எடப்பாடி பேச்சுக்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும். யார் யாரை கூப்பிடவில்லை என்பதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும் .

வரும் 28ஆம் தேதி தனது அரசியல் கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்துவதற்கு வாழ்த்துக்கள் விஜய்யோடு பாஜக கூட்டணி வைக்குமா என்பது குறித்து நான் பதில் கூற முடியாது கூட்டணி சம்பந்தமாக எப்பொழுதும் நான் கருத்து தெரிவித்தது கிடையாது பாஜகவில் அதற்கென்று ஒரு அமைப்பு உள்ளது அதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யும்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார் . அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும். புதிதாக ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் பாஜக கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது

நடிகர் விஜய் திமுக பாஷையில் தான் நீட் விவகாரமாக இருந்தாலும் சரி எந்த விவகாரம் இருந்தாலும் சரி பேசி வருகிறார் எனவே அவர் அரசியலுக்கு வந்தால் திமுக வாக்குகளை தான் பிரிப்பார்.

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது தொகுதி தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துள்ளார் வேறு எதுவும் கிடையாது.

தலித்துகள் முதல்வராக ஆக முடியாது என்று திருமாவளவன் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது . பாஜக பல்வேறு மாநிலங்களில் தலித் முதலமைச்சர்களை கொண்டு வந்துள்ளோம்

ஜனாதிபதி கூட தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். பட்டியல் இனத்து மக்களை கௌரவப்படுத்துபவர்கள் பாஜக தமிழகத்தில் தலித் ஏன் முதலமைச்சராக ஆக முடியவில்லை என்று திருமாவளவன் திமுக தலைவர் தான் கேட்க வேண்டும் அவருக்கு முதல்வராக ஆக விருப்பம் இருந்தால் அதை வெளிப்படையாக திமுக நான் முதல்வராக ஆவதை தடுக்கிறது என்று அறிவிக்க வேண்டும்.

பட்டியலின மக்களை கவுரவப்படுத்தும் கட்சி பாஜக,தமிழக மக்கள் பெருவாரியாக பாஜகவை ஆதரித்து விட்டால் திருமாவளவனின் வருத்தம் தீரும்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே கர்நாடகாவில் எடுக்கப்பட்டது அதை ஏன் அவர்கள் வெளியிடவில்லை . ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் 140 கோடி மக்களையும் நீங்கள் எந்த ஜாதி என்று தான் கேட்டு அதன்படி தான் கணக்கெடுப்பு நடத்த முடியும் ஒவ்வொரு மக்களையும் அதேபோன்று கேட்கும் போது ராகுல் காந்தியை கேட்கும் போது மட்டும் கனிமொழிக்கு ஏன் கோபம் வருகிறது

140 கோடி மக்களையும் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டு கணக்கெடுப்பு நடத்தும் போது சரி என்றால் ராகுல் காந்தி பார்த்து கேட்கும் போது மட்டும் ஏன் நாகரிகமாற்ற செயலாக மாறும்.

அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்று செல்கிறார் அதை இன்னும் அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதல்வர் அமெரிக்கா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது அவர் முதலீடு ஈர்ப்பதற்காக செல்கிறாரா? அல்லது முதலீடு செய்ய செய்கிறாரா என்பது அவர் விளக்க வேண்டும்.

ஏனென்றால் ஏற்கனவே துபாய் முதலீடு பயணத்தில் என்னென்ன முதலீடு வந்தது என்பது இதுவரை தெரியவில்லை. முதல்வருக்கும் வாழ்த்துக்கள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆனால் தமிழக அரசியலிலோ நிர்வாகத்திலோ எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.ஒரு மாற்றமும் ஏற்படாது

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஏதோ குழப்பம் நடந்து கொண்டுள்ளது
பொறுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

ஆளுநர் அளிக்கும் விருந்தில் அதிமுக பாஜக ஆகியவை கலந்து கொண்ட நிலையில் திமுக கூட்டணியில் திமுகவை தவிர எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை

அண்ணாமலை பேச்சு முதிர்ச்சியற்ற பேச்சு என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார் என்றதற்கு குறித்து பதில் அளித்த அவர் உதயகுமார் பேச்சு மட்டும் முதிர்ச்சியான பேச்சில்லையா? பாஜக தலைவர் குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை என கூறினார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!