Exit Poll-க்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்பாத காங்கிரசுக்கு தோல்வி பயம் : அண்ணாமலை தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 5:13 pm

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார் அண்ணாமலையார் கோவில் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மோடி மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் வேண்டுதல் வைத்துள்ளதாகவும், வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி கொடுப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்த அண்ணாமலை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நேற்று காலை சஸ்பெண்ட் செய்துவிட்டு நேற்றுமாலை அவரது பணி நிறைவு அன்று சஸ்பன்டை ரத்து செய்துள்ளனர்.

காவல்துறையில் உயர் அதிகாரியாக உள்ளவர்களை கடைசி நாட்களில் சஸ்பெண்ட் செய்வது என்பது அரசியல் அர்ப்பணர்ச்சியை காட்டுகிறது என தெரிவித்த அண்ணாமலை ராகுல் காந்தியோ மம்தா பானர்ஜி இன்றும் நாளை எப்போது வேண்டுமானாலும் என்ன வேணாலும் செய்யலாம் அதற்கு அரசியல் உரிமை சட்டத்தில் இடம் உள்ளது.

இந்தியா கூட்டணி கூட்டம் அறிவித்தனர் ஆனால் இந்த கூட்டத்திற்கு ஸ்டாலின் அவர்கள் செல்லவில்லை மற்ற அனைத்து கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே செல்கின்றனர் ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு ஸ்டாலின் செல்லவில்லை.

மேலும் படிக்க: கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவர்களுக்கு அதிர்ச்சி.. வட்டாட்சியரிடம் புகார் : உடனே நடந்த ட்விஸ்ட்!

மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டு வருகிறார் பாஜகவின் ஒரு தொண்டன் கூட அங்கு செல்லவில்லை வரவேற்பும் அளிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் இதையெல்லாம் விஷமதனாக அரசியல் செய்து கொண்டிருக்கிறற்கள் என தெரிவித்தார்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!