பின்வாங்கிய அசோக் கெலாட்.. நேருக்கு நேர் மோதும் சசிதரூர் – திக்விஜய் சிங் ; பரபரப்பில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 9:27 pm

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் சசிதரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் வரும் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்தத் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி பதவியை ஏற்க மறுத்ததால், அந்தப் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதேவேளையில், ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட்டை நியமிக்க சோனியா காந்தி திட்டமிட்டார்.

ஆனால், சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு அசோக் கெலாட் அதிருப்தியடைந்தார். எனவே, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

இதனால், அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக நியமிக்க சோனியா முடிவு செய்தார். திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக திக்விஜய் சிங் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!