காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான திக்விஜயசிங் – சசிதரூர் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், நள்ளிரவில் ஜி23 தலைவர் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் வரும் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தத் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி பதவியை ஏற்க மறுத்ததால், அந்தப் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதேவேளையில், ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட்டை நியமிக்க சோனியா காந்தி திட்டமிட்டார்.
ஆனால், சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு அசோக் கெலாட் அதிருப்தியடைந்தார். எனவே, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.
இதனால், அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக நியமிக்க சோனியா முடிவு செய்தார். திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதனிடையே, திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக திக்விஜய் சிங் அறிவித்துள்ளார். இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள சசி தரூர் இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜி23 குழுவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிகிறது. மற்றொரு வேட்பாளராக களம் காண உள்ள திக்விஜய சிங் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்களான அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி உள்ளிட்டோர் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். இதனிடையே, யார் யாரெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார்கள் என்பது தெரிந்த பின், சிறந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு இருக்கும் என்று ஜி23 தலைவர்களில் ஒருவரான பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், சசிதரூர், திக்விஜய சிங் ஆகியோருக்கு ஆதரவு அளிக்க சக ஜி23 தலைவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவே, 3வது சிறந்த வேட்பாளர் யாரேனும் களமிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
This website uses cookies.