பாஜக 9 தொகுதிகளை குறிவைக்கிறது இருக்கட்டும்… டெபாசிட்டாவது வாங்குமா..? அண்ணாமலை பேச்சுக்கு கேஎஸ் அழகிரி கிண்டல்…!!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 2:14 pm

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் கேஎஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,
தமிழக பாஜக 9 தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி இருப்பதாகவும், அந்த 9 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். அதேபோல, இந்த முறை தமிழகத்தில் இருந்து 9 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வது உறுதி என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இவர்களின் இந்தப் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :- இருந்த கூட்டணியையும் முறித்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நிற்கிறோமே என்று சொந்த கட்சிக்காரர்களே புலம்பி வருகிறார். கூட்டணியில் இருக்கும் போதே தமிழகத்தில் பாஜகவால் சாதிக்க முடியவில்லை.

இப்போது தனித்து நின்று 9 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று கூறுவது நகைச்சுவை தான். ஜெயிப்பது இருக்கட்டும். முதலில் 9 தொகுதிகளிலாவது டெபாசிட்டை வாங்க முடியுமா..? என்பதை பாஜக யோசிக்க வேண்டும்.

மத்தியில் மோடி மக்களை ஏமாற்றுவது போல் தமிழகத்தில் அண்ணாமலையும் ஏமாற்றுகிறார். ஆளே இல்லாத கடைக்கு டீ போடுவது ஏன்..? இல்லாத கட்சிக்கு 9 இடங்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார், தேர்தல் வரை இப்படியாவது ஆறுதல் தேடிக் கொள்ளட்டும், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0