ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு… உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 4:17 pm

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏவாக அவர் பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!