தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் அண்ணாமலை… திடீர் வெளிநாட்டு பயணம் ஏன்..? சந்தேகத்தை கிளப்பும் ஜோதிமணி!!
Author: Babu Lakshmanan11 நவம்பர் 2023, 2:14 மணி
பாதயாத்திரை என்ற பெயரில் சிறு குறு தொழில்திபர்களிடம் மிரட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் பறித்து வருவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- தமிழக, பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை மூலம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்து வருகிறார் என தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு ஆதாரமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாயும், மதுரை சேர்ந்த ஒருவர் ரூ. 75 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக அதற்கான ஆடியோ வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் பாதயாத்திரை சென்றுள்ளனர். குறிப்பாக, வை.கோ, குமரி ஆனந்தன், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாதயாத்திரையின் போது ஒரு இடத்தில் தொடங்கி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து யாத்திரை சென்றனர். ஆனால், அண்ணாமலை பெயருக்காக தினசரி ஒரு கிலோமீட்டர், அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு பாதயாத்திரை என்ற பெயரில் கோடிக் கணக்கில் வசூல் செய்து வருகிறார். பாதயாத்திரை என்ற பெயரில் சிறு குறு தொழில்திபர்களிடம் மிரட்டி பணம் பறித்து வருகிறார்.
கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பதவியில் இருக்கும் போதே ஊழலில் ஈடுபட்டவர். அதே வேலையை தற்போது அரசியலிலும் செய்து வருகிறார். பாதயாத்திரை செல்லும் அண்ணாதுரை எதற்கு திடீரென்று பாதியில் நிறுத்தி விட்டு வெளிநாடு செல்கிறார்?. வெளி நாடுகளில் மிகப்பெரிய தொகை வசூல் செய்வதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வசூல், கொள்ளை குற்றச்சாட்டில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். உலக வரலாற்றிலேயே ஒரு பாதயாத்திரை மூலம் மக்களிடம் கொள்ளை அடிப்பது அண்ணாமலை மட்டுமே. அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
1
0