காங்கிரஸ் விருப்பம் இதுதான்… கார்த்தி சிதம்பரம் போட்ட நாடாளுமன்ற தேர்தல் கணக்கு… திமுகவுக்கு மறைமுக மெசேஜ்..!!

Author: Babu Lakshmanan
5 October 2023, 1:36 pm
Quick Share

பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ள கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :-
ஐ.என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற்று வருகிறது. நடக்க இருக்கக்கூடிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில், அதன் விளைவை பார்த்தீர்கள். காங்கிரஸ் கட்சி சமூக வெற்றி பெற இருக்கிறது. பாஜக படுதோல்வி அடைய உள்ளது.

குறிப்பாக, தெலுங்கானாவில் பாஜக ஒற்றை இழக்க இடத்தில் மட்டும் தான் வெற்றி பெறப் போகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை 39 இடங்களிலும் ஐ.என்.டி..ஏ கூட்டணி அமோக வெற்றி பெற இருக்கிறது.

பாஜகவின் இந்துத்துவா அரசியல் வடமாநிலங்களுக்கு மட்டுமே சரியாக அமையும், அது முற்றிலும் வெஜிடேரியன் இந்துத்துவா அரசியல். தமிழகத்தை பொறுத்தவரை ஆடு, கோழி பலியிடும் சுவாமிகளும் உள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டோம். தற்பொழுது அதைவிட அல்லது அதற்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதுதான் விருப்பம்.

காவிரி நீர் பிரச்சனை என்பது இரு கட்சிகளுக்கு இடையே அல்லது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை அல்ல, இதனை நிபுணர்கள் மூலமாகத்தான், உணர்ச்சி ரீதியாக தீர்வு காண முடியாது. பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை, எனக் கூறினார்.

பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ள கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஐ.என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற்று வருகிறது. நடக்க இருக்கக்கூடிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில், அதன் விளைவை பார்த்தீர்கள். காங்கிரஸ் கட்சி சமூக வெற்றி பெற இருக்கிறது. பாஜக படுதோல்வி அடைய உள்ளது.

குறிப்பாக, தெலுங்கானாவில் பாஜக ஒற்றை இழக்க இடத்தில் மட்டும் தான் வெற்றி பெறப் போகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை 39 இடங்களிலும் ஐ.என்.டி..ஏ கூட்டணி அமோக வெற்றி பெற இருக்கிறது.

பாஜகவின் இந்துத்துவா அரசியல் வடமாநிலங்களுக்கு மட்டுமே சரியாக அமையும், அது முற்றிலும் வெஜிடேரியன் இந்துத்துவா அரசியல். தமிழகத்தை பொறுத்தவரை ஆடு, கோழி பலியிடும் சுவாமிகளும் உள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டோம். தற்பொழுது அதைவிட அல்லது அதற்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதுதான் விருப்பம்.

காவிரி நீர் பிரச்சனை என்பது இரு கட்சிகளுக்கு இடையே அல்லது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை அல்ல, இதனை நிபுணர்கள் மூலமாகத்தான், உணர்ச்சி ரீதியாக தீர்வு காண முடியாது. பாஜக அதிமுக கூட்டணிப் பிளவு இரு காதலர்களுக்கு இடையேயான பிரிவா அல்லது நிரந்தர விவாகரத்து என எனக்கு தெரியவில்லை, எனக் கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 347

    0

    0