SOUND AND FURY மாதிரி தான்… அதிக சத்தம் இருக்கும்.. ஆனா செயல்பாடு ஒன்னும் இல்ல… அண்ணாமலை குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

Author: Babu Lakshmanan
29 February 2024, 2:50 pm

அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசையில் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமாா், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் எந்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்பதை சொல்ல வேண்டும், மத்திய அரசின் தமிழகத்திற்கான நிதி குறைந்திருக்கிறது. ஒரு ரூபாய்க்கு 28 பைசா தான் வழங்குகிறார்கள். தமிழகத்தில் எந்த திட்டத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதனை செயல்படுத்தவில்லை என்பதை பிரதமர் தெளிவாக சொல்ல வேண்டும், எனக் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் MGR, அம்மா குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு, “அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசையில் பேசியுள்ளார். கீழ்மட்ட அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள், என்றார்.

திமுக காணாமல் போகும் என பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு : பிரதமர் மோடி நிறைய பேசுவார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேறூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அதனை நீக்க முடியாது, என்றார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தொடர்பான கேள்விக்கு : SOUND AND PURY என்பது போல நிறைய சத்தம் இருக்கு, ஆனால் செயல்பாடு இல்லை. எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பாஜகவில் இணையவுள்ளதாக கூறியது குறித்த கேள்விக்கு : பாஜக கூறிய 15 லட்சம் போல தான் அதுவும். தமிழகத்தில் அண்ணாமலையை பூதகண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள்.
பாஜகவின் நிலை வாக்கு எண்ணும் போது தான் உண்மையான நிலை தெரியும், எனக் கூறினார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 267

    0

    0