கட்சி மற்றும் கூட்டணி பலத்தை மட்டும் தான்… ஒருவேளை அது நடந்தால் டிடிவி-க்கு செட்டிநாட்டு விருந்தோம்பல் நிச்சயம் ; கார்த்தி சிதம்பரம்!!
Author: Babu Lakshmanan7 March 2024, 12:59 pm
ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கூட்டணி பலமும் கட்சி சின்னமும் இருந்தால் மட்டும் போதும் என்றும், தனிப்பட்ட நபர் செல்வாக்கு தேவையில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது :- யாருக்கு நன்கொடை கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் தேர்தல் பத்திரம் பெறுவது தவறானது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டேட் பேங் கால அவகாசம் பெற்றது வேடிக்கையாக உள்ளது, கண்டிக்க தக்கத்து. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இருக்கின்ற 39 தொகுதியைத்தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டியுள்ளது. எய்ம்ஸ் விவகாரத்தில் மீண்டும் பூமி பூஜை செய்துள்ளனர். மற்றபடி அவர்கள் பணிகளை தொடங்கவில்லை.
வருகின்ற தேர்தலை எதிர்கொள்ள எனது தந்தையின் தயவு இன்னும் எனக்கு தேவைப்படுகிறது. அதே வேலையில் கட்சி பலம் கூட்டணி பலம் தான் முக்கியம். எம்பி, எம்எல்ஏ பெயர்களை விட கட்சியின் சின்னம் தான் மக்களுக்கு தெரியும். எனவே, கட்சி பலத்தையும், கூட்டணி பலத்தையும் நம்பி தேர்தலை எதிர் கொள்கிறேன்.
மன்னார்குடியில் இருந்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட டிடிவி தினகரன் வந்தால் அவருக்கு செட்டிநாட்டு வழக்கப்படி நல்ல விருந்தோம்பல் செய்து வழி அனுப்பி வைப்போம். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான மத்திய அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய தேர்தல் பரப்புரையாக இருக்கும்.
டிடிவி தினகரன் எனக்கு நல்ல நண்பர்தான், மன்னார்குடியில் இருந்து டிடிவி தினகரின் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வந்தால், செட்டிநாட்டு வழக்கப்படி அவருக்கு 3 வார காலம் நல்ல விருந்தோம்பல் செய்து மீண்டும் அவரை வழி அனுப்பி வைப்போம். எங்களுடைய தேர்தல் பிரச்சாரமாக விலைவாசி உயர்வு மத்திய அரசு தமிழகத்தை நிதி கொடுக்காமல் வஞ்சித்தது உள்ளிட்டவைகள் முக்கியமானவையாக இடம்பெறும், எனக் கூறினார்.