‘இந்தப் படத்தை பார்த்ததற்கு எனக்கு தான் கார் கொடுக்கனும்’ ; ஜெயிலரை மறைமுகமாக கிண்டல் செய்தாரா கார்த்தி சிதம்பரம்..?

Author: Babu Lakshmanan
9 September 2023, 2:37 pm

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிவு போட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். காவாலா மற்றும் டைகர் கா ஹுக்கும் பாடல்கள் படு ஹிட்டாகின. மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் படம் ரூ.600 கோடியை கடந்து வசூலை ஈட்டியுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உயர் ரக சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.

அண்மையில் இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது X தளத்தில் ஒரு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்,” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அநேகமாக இவர் ஜெயிலர் படத்தை தான் கிண்டல் செய்து இப்படி பதிவு போட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 441

    0

    0