மனநலம் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை… மத்தியில் பாஜக ஆட்சி இல்லையென்றால் அவர் காணாமல் போய் விடுவார் ; திருநாவுக்கரசர் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan11 March 2023, 11:51 am
புதுக்கோட்டை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மனநலம் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் தாமரை மலரும் மலரும் என்று அவர்களும் சொல்லிக் கொண்டுதான் உள்ளனர். தாமரை நிறைய குளங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது. வீட்டிலேயே மற்ற இடங்களிலோ, ஆட்சியில் மலர்வதைப் போல் தெரியவில்லை. அண்ணாமலை நான் ஜெயலலிதா போல், கலைஞர் போல் என்று பேசி வருகிறார். அவர் ஒரு பாவம். மனரீதியா பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தியானத்தில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்று பேசிக்கொண்டு வந்தால் அவருக்கு முத்திவிடும். பிறகு அவர் மோடி அமித்ஷா வாஜ்பாய் மாதிரி நான் என்று கூறி விடப் போகிறார்.
ராகுல் காந்தியின் நடைபயணம் எடுபடவில்லை என்று விமர்சனம் செய்யும் எச்.ராஜா தற்போது நடைமுறையாக இருக்கிறாரா..? ஏனென்றால், அண்ணாமலை வந்ததற்கு பிறகு அவரை பார்க்கவில்லை. அண்ணாமலை தலைவராக வந்த பிறகு முன்னாள் தலைவர்கள் பலரையும் காணவில்லை. ராகுல் காந்தி நடைபயணம் உலக சாதனையாக போற்றப்படுகிறது. தமிழ்நாடு இந்தியா உலக நாடுகள் வரை எந்த அரசியல் தலைவர்களும் இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக சிரமப்பட்டு நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்தியாவை ஒன்றிணைக்க அவர் நடைபயணம் மேற்கொண்டார்.
இதை பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருட்டாக தெரிவது என்று சொல்வதைப் போல பேசக்கூடாது. சட்டமன்றத் தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது. சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் எடுக்கும் முடிவு வேறு, நாடாளுமன்ற தேர்தலின் போது எடுக்கும் முடிவு வேறு. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும். யார் பிரதமராக வரவேண்டும் என்ற தேர்தல்.
மத்தியில் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற தோரணையில் அச்சுறுத்தும் படி பேசுவது பாஜக ஆட்சியில் இல்லை என்றால் அண்ணாமலையால் என்ன செய்ய முடியும். ஆட்சியில் இருக்கின்றோம் என்று அகந்தையால்தான், இதுபோன்று அண்ணாமலை செயல்படுகிறார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மறைமுகமாக தந்திரமாக செயல்படுவதே தவிர, இவர் சிபிஐயா? அண்ணாமலை ஒரு தமிழக பாஜகவின் தலைவர். இவர் வருமானவரித்துறை அதிகாரி போல் கணக்கெடுத்து வைத்துள்ளதை போல் பேசக் கூடாது.
தமிழ்நாட்டில் தாமரை மலரும் மலரும் என்று அவர்களும் சொல்லிக் கொண்டுதான் உள்ளனர். தாமரை நிறைய குளங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது. வீட்டிலேயே மற்ற இடங்களிலோ, ஆட்சியில் மலர்வதைப் போல் தெரியவில்லை. அண்ணாமலை நான் ஜெயலலிதா போல், கலைஞர் போல் என்று பேசி வருகிறார் அவர் ஒரு பாவம். மனரீதியா பாதிக்கப்பட்டுள்ளார் அவர். தியானத்தில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியாக, இதுபோன்று பேசிக்கொண்டு வந்தால் அவருக்கு முத்திவிடும். பிறகு அவர் மோடி, அமித்ஷா, வாஜ்பாய் மாதிரி நான் என்று கூறி விடப் போகிறார்.
பாஜக, அதிமுக ஒருத்தரை விட்டு ஒருத்தர் போக முடியாது. போகவும் மாட்டார்கள். அதிமுகவை விட்டு சென்றால், பாஜக ஒன்றுமே இருக்காது. சுத்தமாக காலியாகி விடும். அண்ணாமலை பேசுவதை அப்புறம் நீங்களே கேட்க மாட்டீர்கள். பாஜகவை விட்டு அதிமுக சென்றது என்றால், அவர்களுக்குள் குழப்பங்கள் பிரிவினைகளால் மேலும் அது பலவீனம் ஆகிவிடும். மேலும், அண்ணாமலை அவர்களை மிரட்டவும் செய்வார்.
பாஜக, அதிமுக சண்டை போடுவதைப் போல நடிக்க செய்கின்றனர். ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கிறது. பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர்களுக்கே தெரியும். பாஜகவை சார்ந்திருப்பதால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அண்ணாமலைக்கு தெரியும். அதனால் விட்டுவிட்டு போக முடியவில்லை, இருப்பது போல் காட்டிக்கவும் கூடாது. அதனால்தான், சண்டை போடுவதைப் போல நடிக்கின்றனர், என தெரிவித்துள்ளார்.