காங்கிரஸ் கட்சிக்கு ₹1800 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை : வரி தீவிரவாதம் என மூத்த தலைவர் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 2:39 pm
காங்கிரஸ் கட்சிக்கு ₹1800 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை : வரி தீவிரவாதம் என மூத்த தலைவர் விமர்சனம்!!
காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் வருமானம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ததில் தவறு இருப்பதாக 200 கோடி ரூபாய் செலுத்த நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேலும் வரி தீர்ப்பாயம் மூலம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் எந்தவிதமான நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இதனால் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறது.
உயர்நீதிமன்றம் காங்கிரஸ்க்கு நிவாரணம் அளிக்க முன்வராத நிலையில், தற்போது சுமார் 1823 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் புதிய நோட்டீஸ் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம்.
காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.