எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டாரை தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைக்க கர்நாடகா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தெலங்கானாவில் மட்டும் முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. அதேவேளையில், தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றி பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆளும் பாஜக அரசை தோற்கடித்து 136 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இந்தத் தேர்தல் வெற்றி டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது என்றே சொல்லலாம்.
எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் இலக்காக நிர்ணயித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக, அம்மாநில தலைவர்களுக்கு கட்சி மேலிடம் பல்வேறு அசைன்மெண்டுகளை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமாரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுமாறு ஷிவ ராஜ்குமாருக்கு கர்நாடகா துணை முதலமைச்சர் ஷிவகுமார் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.