நீண்ட நேரம் கையேந்திய வைகோ… லட்டு தராமல் அவமதித்த கார்கே ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 9:40 pm

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிய போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவமதித்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, மீண்டும் ராகுல் காந்தியை எம்.பி., ஆக அறிவித்து நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடினர்.

Rahul - Updatenews360

அதேபோல, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடியிருந்த, I.N.D.I.A கூட்டணி கட்சியினர் ஒன்று கூடி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

அப்போது, தட்டு நிறைய லட்டுகளை வைத்திருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, மற்றவர்களுக்கு லட்டுகளை வழங்கினார். அப்போது அவருக்கு எதிரில் நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனக்கு லட்டு வழங்குமாறு கேட்டு, கார்கேவிடம் கையை நீட்டினார். ஆனால், கார்கே அதை அவருக்கு வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து, வைகோ கையை நீட்டிக் கொண்டிருக்க, அவரைத் தவிர மற்ற அனைவருக்கும் லட்டுகளை வழங்கினார் மல்லிகார்ஜுன கார்கே. பின்னர், அவருக்கு கடைசியாக தான் லட்டு வழங்கப்பட்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் மத்தியில் கம்பீரமான அரசியலுக்கும், கர்ஜனை அரசியலுக்கும் பெயர் போன, வைகோ போன்ற தலைவருக்கு இது போன்ற அவமதிப்பு தற்செயலாக நடந்ததா..? அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது குறித்த விவாதம் எழத் தொடங்கியுள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 413

    0

    1