பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் : அதிர்ச்சியில் உறைந்த டெல்லி காங்கிரஸ்…!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 5:12 pm

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணியின் மகன் பாஜகவில் இன்று இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. வயது முதிர்வால் இவர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவரது மகன் அனில் கே அந்தோணி காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அதாவது, “இந்திய அமைப்புகளின் மீதுள்ள பி.பி.சி.யின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்ற செய்து விடும்,” என டுவிட்டரில் பதிவிட்டார்.

அவரது இந்தப் பதிவிற்கு காங்கிரஸில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் பதிவை நீக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த அவர், கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அனில் கே. அந்தோணி மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் வி முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.

ஏற்கனவே, பல்வேறு விதங்களில் பாஜக நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கட்சி தாவுவது டெல்லி தலைமைக்கு வேதனை உருவாக்கியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 457

    0

    0