மொழி, மாநில, மத ரீதியாக பிரித்த காங்கிரஸ் இப்போது நிற ரீதியாக பிரிக்க முயற்சி : பாஜக குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2024, 2:27 pm
மொழி, மாநில, மத ரீதியாக பிரித்த காங்கிரஸ் இப்போது நிற ரீதியாக பிரிக்க முயற்சி : பாஜக குற்றச்சாட்டு!!
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்த நிலையில், இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என பேசி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசியபோது, அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதிலும், 75 ஆண்டுகளாக இணக்கமாக வாழும் அதன் மக்களின் திறனை எடுத்துக்காட்டினார். ஆனாலும், இன ரீதியாக அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!
“இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை நாம் ஒன்றிணைக்க முடியும் — கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும் இருப்பார்கள். அது ஒரு பொருட்டல்ல. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்.” என சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபடும் பல்வேறு மொழிகள், மதங்கள், சமையல் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற்கு இந்திய மக்கள் மரியாதை காட்டுகிறார்கள் என்று பிட்ரோடா விரிவாகக் கூறினார். “அதுதான் நான் நம்பும் இந்தியா, அங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக சமரசம் செய்கிறார்கள்.” என அவர் கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது X தளப்பதிவில், “தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்களை போல் உள்ளார்கள்” : சாம் பிட்ரோடா, காங்கிரஸ்.
இது வரை இந்தியாவை மொழி ரீதியாக, மாநில ரீதியாக, மத ரீதியாக பிரித்து கொண்டிருந்த காங்கிரஸ், தற்போது நிற ரீதியாக பிரிக்க முயல்கிறது என விமர்சித்துள்ளார்.