ஆறுதல் தந்த பாதிப்பு… அதிர்ச்சி தந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 8:15 pm

சென்னை : தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 46 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது. இன்று 24,639 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,296 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,786 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 1,742 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,236 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 1504 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 5434

    0

    0