தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி : நாட்டு வெடிகுண்டு வைத்த இளம்பெண்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 9:49 am

முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி.. நாட்டு வெடிகுண்டு வைத்த இளம்பெண் கைது : தமிழகத்தில் அதிர்ச்சி!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட குண்டு குளம் ஜங்ஷனில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது , இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக கடக்க முயன்றது.

அதை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்க முயன்ற போது , தப்பி ஓட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை மடக்கி பிடித்து பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அந்த பெண் வைத்திருந்த பையை சோதனை செய்த போது காவல் துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் பையில் கன்ட்ரி பாம் எனப்படும் நாட்டு வெடிகுண்டும், இரண்டு பட்டா கத்திகளும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

அவர்களிடமிருந்து, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு பட்டாக்கத்திகள், அரை கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்து விசாரித்ததில், அந்த இளம் பெண்ணின் பெயர் தமிழரசி (வயது 22) என்பதும், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியை சேர்ந்த இந்தப் பெண் சில மாதங்களாக காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் தங்கியிருந்து, பாலியல் தொழில் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அந்தஇளம் பெண்ணுடன் பிடிப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 25) என்பதும் பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என்றும், மற்றொரு இளைஞர் பெயர் “நோய் வசந்த்” (வயது 22) , 5 க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது.

தமிழரசியிடம் இருந்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு எக்ஸ்ப்ளோர் குடோனில் வைத்து உள்ளனர்.

மேலும் பட்டாகத்திகள், கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சென்னை மத்திய‌ சிறைக்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரித்த போது, ஒரு முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்தது.

விடியா திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்து வரும் கலாச்சாரம் பெருகி வருகின்றது .

அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் ஒரு இளம் பெண்ணே நாட்டு வெடி ஒன்றை மறைத்து வைத்து ஒரு முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமிட்டு வந்த செயல் காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு வெடி குண்டுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படுகின்றதா அல்லது வேறு மாநிலத்திலிருந்து வாங்கி வந்த இங்கு பயன்படுத்துகின்றனவா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!