ஆம்ஸ்ட்ராங்கை போல பாஜக பிரமுகரை கொலை செய்ய நடந்த சதி.. கடைசி நேரத்தில் டுவிஸ்ட் வைத்த காக்கி!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 4:30 pm

தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றியவர்.

பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்கம் மற்றும் வட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்வதற்கான குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்.

ஆயுதம் ஏந்தி போராடும் மாவோயிஸ்டுகளை சரண் அடையச் செய்வதுடன், முக்கியமான மாவோயிஸ்ட் தலைவர்களை பாஜகவில் இணைக்கும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருப்பவர்.

தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ள “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்கிற தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்த்து பல வகைகளில் போராட்டம் நடத்தி தடை செய்வதில் பெரும்பங்கு வகித்தார் .

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். இந்தியா முழுவதும் இப்படி பல தீவிரவாத இயங்கங்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு செய்து கொண்டிருக்கக் கூடிய இவரை பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டி அதற்கான பல வேலைகளை பல்வேறு தீவிரவாத குழுக்கள் இணைந்து செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழக காவல்துறை உரிய நேரத்தில் ஒரு பெரிய அசம்பாவிதத்தை தடுத்திருக்கிறார்கள். இதில் மத்திய உளவுத்துறையும் தங்களுடைய பங்கிற்கு பல தகவல்கள் கொடுத்ததன் அடிப்படையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் போல இன்னொரு பெரிய அசம்பாவிதம் தற்பொழுது தடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக வங்கதேசத்திலிருந்து ஊடுருவியுள்ள இளைஞர்களை பல்வேறு மாநிலங்களில் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூரிலும் சில வங்க தேச இளைஞர்கள் அதிரடியாக தமிழக போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாச வேலைகளை செய்த இந்த கும்பல் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் அதனை போலீசார் கடைசி நேரத்தில் முறியடித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

இதை அடுத்து ஏ.பி. முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 392

    0

    0