தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தாஹீர்’ அமைப்புடன் தொடர்பு… தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 1:16 pm
NI
Quick Share

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஹிஸ்புல்த் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஹிஸ்புத் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பும் வகையிலும் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்க்கும் முயற்ச்சியிலும் ஈடுபட்டு வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு இடம் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்,அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோர் இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் இபி காலனி பகுதியைச் சேர்ந்த கபீர் அகமது (40) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி குமரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கபீர் அகமது இஸ்புல்த் தாஹிர் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சோதனைக்கு பிறகு எந்த மாதிரியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட சோதனை மற்றும் நடவடிக்கை இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னை உட்பட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேல் கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 98

0

0