தொடரும் சமஸ்கிருத சர்ச்சை…மதுரையை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியிலும் உறுதிமொழி : வைரலான வீடியோவால் சிக்கும் அடுத்த டீன்?
Author: Udayachandran RadhaKrishnan2 May 2022, 6:43 pm
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஏற்கனவே மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டதாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் ராமநாதபுரத்தில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் அல்லி தெரிவித்துள்ளது மீண்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து இன்று காலை மாணவர்கள் சங்கம் விளக்கம் அளித்தது, அதில் ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி ஏற்றோம் என கூறியிருந்தனர்.
இதனிடையே, மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சரக்பத் உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே வைட்கோட் செர்மனி, சரக்சபத் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தேசிய மருத்தவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்
இந்த நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0
0