உயிரே போனாலும், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்… விசிக பிரமுகரின் சர்ச்சை பேச்சு : தடுக்க துப்பில்லாத திமுக அரசு.. விளாசிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 10:54 am

திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தனி நாடு என்ற கோரிக்கையை பற்றி திமுகவினர் பேசவில்லை என்றாலும், நாமக்கல் அருகே நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்பி ஆ.ராசா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும் என கூறினார்.

இந்த நிலையில் விசிக பிரமுகர் வன்னியரசு, ஒரு படி மேலே சென்று, தனித் தமிழ்நாடு கொண்டுவருவதுதான் செங்கொடிக்கு செலுத்த உள்ள உரிமை, கடமை என பேசியுள்ளார்.

இந்தாண்டு ஆகஸ்ட் 17முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 17 வரை கிராம கிராமமாக இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற உள்ளதாகவும், சனாதான தர்மத்தை எதிர்த்து, இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு தனி நாடகாக பிரிப்பதுதான் நம் உரிமை. இதுவே நாம் செங்கொடிக்கு செலுத்த வேண்டிய கடமை என்றும், நம் உயிரே போனாலும் இதை செய்வோம் என உறுதியேற்பதாக விசிக மாநாட்டில் வன்னியரசு பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், பிரிவினைவாத சக்தியால் தமிழ்நாடு தவறான பாதையை நோக்கி பயணிக்கிறது என்றும், இதை தடுக்க துப்பில்லாத திமுக அரசு பின்விளைவுகளை அறியாமல் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மக்கள் மேடையில் பிரிவினைவாத மொழி பேசுவதற்கான தகுதி அவர்களிடம் இல்லை என கூறியுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 562

    0

    0