பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு : புதுச்சேரியில் பதுங்கியிருந்த ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் போலீசாரிடம் சிக்கினார்!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2022, 11:31 am
சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.
சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சியினர் கடும் கண்டங்களை பதிவு செய்திருந்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் அவர் தலைமறைவானார்.
இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த கனல் கண்ணன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.