ஊடகத்துறை குறித்து இழிவுப்பேச்சு: நடுநிலை தவறியதாக குற்றச்சாட்டு…பிரபல நாளிதழை எரித்த இளைஞர்கள்…!!(வீடியோ)
Author: Rajesh6 February 2022, 8:45 am
கோவை: கோவையில் ஊடகத்துறையை இழிவு படுத்தி பேசுவதுடன் பிரபல நாளிதழை இளைஞர்கள் இருவர் எரிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை ஜெகதீஸ் என்கின்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் ஊடகத் துறையினரை இழிவு படுத்தியும் பிரபல நாளிதழ் ஒன்றை எரித்தும் அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவ்வீடியோவில் ஜெகதீஷ் என்ற இளைஞர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஊடகத்துறை என்பதும் பத்திரிகைத்துறை என்பதும் தன் அறத்திலிருந்து சற்றும் மாறாமல் நடுநிலையோடு செய்திகளையும் கருத்துக்களையும் பரப்ப வேண்டும். ஆனால் இந்த நிலைக்கு மாறாக முற்றிலும் மாறுபட்டு சில ஊடகங்கள் ஒரு கூட்டத்திற்கு மட்டும் நடித்து வழங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் ஒரு தனியார் தினசரி நாளிதழ் ஆனது ஒரு கூட்டத்திற்கு மட்டும் ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறது. மேலும் இதே போக்கில் சில மாதங்களாக மற்றொரு தினசரி நாளிதழ் தொடர்ந்து குப்புற விழுந்து குபேரன் ஆன கதை போல் மேஜைக்கு அடியில் சென்று முதலமைச்சர் ஆனவர்களை எல்லாம் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று பொறுப்பு போடுகிறார்கள்.
ஆனால் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரான வரை அவரின் தரத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அவரின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவரின் பதவியையோ அல்லது பொறுப்பையும் அச்சிட மருத்து ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.
தற்போது நான் நாளிதழை முதன்முறையாக காசு கொடுத்து வாங்கி உள்ளேன், படிக்க அல்ல எரிக்க என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் ஊடகத் துறையினரை அவமதித்து பேசி நாளிதழை எரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.