சர்ச்சை அமைச்சரின் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி : வாரிசுகளுக்கு வாரி வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2024, 2:39 pm
திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருவது அனைவருக்கும் கண் கூடு. இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
கருணாநிதி இருந்த காலத்திலேயே அவரது மகன்கள் கட்சியில் பணியாற்றி வந்தனர். பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார்.
கருணாநிதி மறைவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது திமுக. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுபேற்ற 2 வருடங்களில் அவரது மகன் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஒரே நேரத்தில் தந்தை முதலமைச்சராக, வாரிசு அமைச்சராக பதவியில் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
திமுகவில் கருணாநிதி இருக்கும் போதே இதெல்லாம் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதே போல மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மறைவுக்கு பின் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகவும், தற்போது எம்பியாக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது மகனான கலாநிதி வீராசாமி, மூத்த அமைச்சராக துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த், ஐ.பெரியசாமி தனது மகன் ஐ.பி.செந்தில்குமார், அமைச்சர் பொன்முடி தனது மகன் தெய்வசிகாமணி, திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், கே.என்.நேருவின் மகன் அருண் என திமுக வில் உள்ள மூத்த அமைச்சர்களின் மகன்கள் தற்போது எம்பியாக, அமைச்சராக, எம்எல்ஏவாக பதவியில் உள்ளனர்.
அந்த வரிசையில், புதியதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக மருத்துவ மணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட டாக்டர் வல்லவன் ஒன்றிய கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக டாக்டர்.ஆர்.கே.தீலிப்குமார் திமுன மருத்துவ அணி துணைச்செயலாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில மருத்துவ அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழகப்பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.