சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 10:13 am

சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!!

ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வெற்றி பாதயாத்திரை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்தில் நடைபெற்ற பாரத் ஜூடோ யாத்திரை வெற்றி நடை பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கலந்து கொண்டு தொடக்கி வைத்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்களோடு நிர்வாகிகளோடு ப சிதம்பரமும் நடைபயணம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் பிரதமர் மோடிக்கு இந்தியா மீது என்ன கோபம் பாரத் என்று சொல்லுவதில் தவறில்லை. ஆனால் தற்போது பெயர் மாற்ற வேண்டிய அவசியம் என்ன எதிர்க்கட்சிகள் இந்தியா என்று பெயர் வைத்ததாலா? நாளை எதிர்க்கட்சிகள் பாரத் என்று கூட்டணிக்கு பெயர் வைத்தால் அப்போது மோடி என்ன செய்வார்..

இது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை இந்தியா என்றாலும் ஒன்றுதான் பாரத் என்று சொன்னாலும் ஒன்றுதான்அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என்று உள்ளது இந்தியாவும் இருக்கிறது பாரத் என்றும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம் பாரத் என்ற வாசகத்தையும் பயன்படுத்துகிறோம்.

நாடு முழுவதும் சர்ச்சையாகி உள்ள சனாதனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் வேகமாக புறப்பட்டு சென்றார் ப சிதம்பரம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி