கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்து – பல பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் !

Author: Shree
2 June 2023, 9:18 pm

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றில் மோதி கவிழ்ந்து கோர விபத்துகுள்ளாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் புவனேஸ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் அதாவது பாலசோர் மாவட்டத்தில் பகானகா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் சுமார் 7 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்து வனப்பகுதியில் நடந்திருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு அடைந்துள்ளதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து- 67822 62286 என்ற அவசர கால உதவி எண் அறிவிப்பு

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!