புதிதாக 112 பேருக்கு கொரோனா பாசிடிவ்: கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை..மீண்டு வரும் தமிழகம்..!!

Author: Rajesh
11 March 2022, 8:47 pm

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 327 பேர் குணமடைந்துள்ளனர். ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 241 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 42 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!