சென்னை, கோவையில் மெல்ல மெல்ல குறைந்த கொரோனா : கிடுகிடுவென அதிகரித்த உயிரிழப்பு

Author: kavin kumar
1 February 2022, 8:57 pm

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 25,592 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,88,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,599 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 1897 பேருக்கும், செங்கல்பட்டில் 1308 பேருக்கும், திருப்பூரில் 1297 பேருக்கும், சேலத்தில் 851 பேருக்கும், ஈரோட்டில் 924 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2226

    0

    0