கிடுகிடுவென சரியும் தமிழக கொரோனா பாதிப்பு : மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு

Author: kavin kumar
7 February 2022, 9:19 pm

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 5ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 13 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,772 ஆக உயர்ந்துள்ளது.அரசு மருத்துவமனையில் 6 பேரும் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது. இன்று 21,027 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 72ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 839 பேருக்கும், கோவையில் 807 பேருக்கும், செங்கல்பட்டில் 466 பேருக்கும், திருப்பூரில் 313 பேருக்கும், சேலத்தில் 991 பேருக்கும், ஈரோட்டில் 288 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!