கையெழுத்து மட்டும் தான் போடுவோம்; டிமிக்கி கொடுக்கும் ஊழியர்களை கண்காணிக்க ஜிபிஎஸ்…!!
Author: Sudha5 August 2024, 11:30 am
சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிப்பிற்கு மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்காக 2,886 வாகனங்கள் உள்ளன.
இந்த வாகன ஓட்டுநர்கள் சிலர் பணியில் இருப்பதாக கையெழுத்து போட்டுவிட்டு, சொந்த வேலைகளுக்கு சென்றுவிடுவதால் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை மாநகராட்சி வாகனங்களில் இனி ஜி.பி.எஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
குப்பை லாரிகள், பொக்லைன், மற்றும் மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் இனி ஜிபிஎஸ் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.